குஜராத் மாநிலதின் மேற்கு கச் பகுதியில் உள்ள லகாபர் கிராமத்திற்கு அருகில் 5,300 ஆண்டுகள் மிகப் பழமையான குடியேற்றத்தைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து ள்ளனர்.
இந்த அகழ்வாராய்ச்சி ஆனது ஒரு முற்கால ஹரப்பா வாழ்விடத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இது ஒரு காலத்தில் வற்றாத நீர் ஆதாரமாக இருந்த காந்தி நதிக்கு அருகில் அமைந்து உள்ளது.
கி.மு. 3300 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆரம்பகாலத்திய மற்றும் பாரம்பரிய ஹரப்பா கட்டங்களிலிருந்து மட்பாண்டங்களின் சான்றுகளும் கிடைத்துள்ளன.
இந்தக் கண்டுபிடிப்புகளில் மிகவும் அரிதான பிரபாஸ் வகை பாண்டங்களுக்கு மிக முந்தைய வகையைச் சார்ந்த பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன என்பதோடு இது முன்னர் குஜராத் முழுவதும் மூன்று தளங்களிலிருந்து மட்டுமே கண்டறியப்பட்டது.
அவர்கள் குடியேற்றத்தின் அருகே ஒரு புதைவிடப் பகுதியைக் கண்டறிந்துள்ளனர்.
மிகச் சரியாக பாதுகாக்கப்படாத ஒரு எலும்புக்கூடு ஆனது நேரடியாகக் காணக் கூடிய ஒரு கட்டிடம் அல்லது அடையாளங்கள் இல்லாத ஒரு குழியில் இந்தப் பிரபாஸ் வகை பாண்டங்களுக்கு முந்தைய வகை சார்ந்த மட்பாண்டங்களுடன் சேர்த்து புதைக்கப் பட்டது.
இந்த அரியப் பாத்திரத்தை உள்ளடக்கிய முதல் அறியப்பட்டப் புதைவிடம் இதுவாகும்.
இது முன்னர் ஆவணப் படுத்தப்படாதச் சடங்கு நடைமுறையினை அல்லது முற்கால ஹரப்பா மக்களுள் இருந்த ஒரு துணைக் குழுவைக் குறிக்கிறது.