TNPSC Thervupettagam

குஜராத் விண்வெளித் தொழில்நுட்பக் கொள்கை 2025-2030

May 3 , 2025 18 days 57 0
  • குஜராத் மாநில அரசானது, இந்தியாவிலேயே முதன்முறையாக விண்வெளித் தொழில் நுட்பத்தில் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக ‘2025-2030 ஆம் ஆண்டு விண்வெளித் தொழில்நுட்பக் கொள்கையினை’ அறிவித்துள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, 5 பில்லியன் டாலர்கள் (தோராயமாக 41,000 கோடி ரூபாய்) மதிப்பிலான முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25,000 திறன் சார் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கொள்கையானது, குஜராத்தைச் சேர்ந்த இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையான விக்ரம் சாராபாய் அவர்களின் வாழ்வியல் மரபினால் ஈர்க்கப்பட்டது.
  • இதற்கடுத்து ஒரு நாள் கழித்து, இஸ்ரோ போன்ற அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட சில தொழில்நுட்பங்களைத் வெளிக்கொணரவும், தனியார் துறையின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும், ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் தமிழ்நாடு விண்வெளி தொழில்துறைக் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
  • குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவைத் தவிர, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தங்கள் பிராந்தியங்களில் விண்வெளி உற்பத்தி தொகுதிகளை நிறுவச் செய்வதற்கான திறன்களை வளர்த்து வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்