TNPSC Thervupettagam

குடியரசுத் தலைவரின் கடற்படை மதிப்பாய்வு 2022

March 1 , 2022 1399 days 590 0
  • விசாகப் பட்டினத்தின் கிழக்குக் கடற்படைப் பிரிவானது 2022 ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவரின் கடற்படை மதிப்பாய்வினை நடத்தியது.
  • இது உலகம் முழுவதும் உள்ள கடற்படைகளால் பின்பற்றப்படும் ஒரு நீண்டகால மரபு ஆகும்.
  • இது அரசிற்கும் அரசின் இறையாண்மைக்குமான தனது விசுவாசத்தினையும் பற்று உறுதியினையும் வெளிப்படுத்தும் நோக்கில், முன்பே அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் கப்பல்கள் ஒன்று கூடும் ஒரு நிகழ்வாகும்.
  • நாடு முழுவதும் “ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்” என்ற நிகழ்வாகக் கொண்டாடப் படும் இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வின் போது இது நடத்தப் பட்டதால் இந்த 12வது கடற்படை மதிப்பாய்வானது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
  • பிரசிடென்ஸ் யாச்ட் என்பது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கடற்படையின் ஒரு கடலோர ரோந்துக் கப்பலாகும்.
  • INS சுமித்திரா இந்த மதிப்பாய்வின் அணிவகுப்பிற்குத் தலைமையேற்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்