குன்மிங்-மாண்ட்ரீல் கட்டமைப்பு குறித்த புதுப்பிப்பு
July 30 , 2026 3 days 69 0
குன்மிங்-மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர்க கட்டமைப்பின் (KMGBF) வரைவு உலகளாவிய மதிப்பீட்டின்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் பல்லுயிர் இலக்குகளை அடைவதற்கான சரியான பாதையில் உலகம் பயணிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
2022 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட KMGBF, பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கான 23 இலக்குகளைக் கொண்டுள்ளது, ஆனால் பெரும்பாலான இலக்குகளின் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது.
பல்லுயிரியலில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பது குறித்த 8-வது இலக்கு மட்டுமே முன்னேறி வருகிறது, ஆனால் அதுவும் தேவையான வேகத்தில் இல்லை.
இந்த மதிப்பீடு 129 தேசிய அறிக்கைகள், 89 தேசிய பல்லுயிர் உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் (NBSAPகள்) மற்றும் பிற உலகளாவியச் சமர்ப்பிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.
இந்த கண்டுபிடிப்புகள் கென்யாவின் நைரோபியில் நடைபெறும் SBSTTA-28 மற்றும் SBI-7 கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்பதுடன் COP17 உலகளாவிய மதிப்பாய்விற்கு இது ஆதரவளிக்கும்.