TNPSC Thervupettagam

காமன்வெல்த் விளையாட்டு சாதனை - மீராபாய் சானு

July 30 , 2026 3 days 99 0
  • ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG) பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.
  • அவர் மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனது தொடர்ச்சியான மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • வெள்ளி (2014) மற்றும் தங்கப் பதக்கங்களுக்குப் (2018, 2022 மற்றும் 2026) பிறகு காமன் வெல்த் விளையாட்டில் அவர் தொடர்ந்து வெல்லும் நான்காவது பதக்கம் இதுவாகும்.
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையை மீராபாய் சானு பெற்றுள்ளார்.
  • அவர் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் (டோக்கியோ 2020) மற்றும் உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் (2017) பட்டத்தையும் வென்றவர் ஆவார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்