TNPSC Thervupettagam

குன்மிங்-மாண்ட்ரீல் கட்டமைப்பு குறித்த புதுப்பிப்பு

July 30 , 2026 3 days 67 0
  • குன்மிங்-மாண்ட்ரீல் உலகளாவிய பல்லுயிர்க கட்டமைப்பின் (KMGBF) வரைவு உலகளாவிய மதிப்பீட்டின்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் பல்லுயிர் இலக்குகளை அடைவதற்கான சரியான பாதையில் உலகம் பயணிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட KMGBF, பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கான 23 இலக்குகளைக் கொண்டுள்ளது, ஆனால் பெரும்பாலான இலக்குகளின் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது.
  • பல்லுயிரியலில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பது குறித்த 8-வது இலக்கு மட்டுமே முன்னேறி வருகிறது, ஆனால் அதுவும் தேவையான வேகத்தில் இல்லை.
  • இந்த மதிப்பீடு 129 தேசிய அறிக்கைகள், 89 தேசிய பல்லுயிர் உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் (NBSAPகள்) மற்றும் பிற உலகளாவியச் சமர்ப்பிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.
  • இந்த கண்டுபிடிப்புகள் கென்யாவின் நைரோபியில் நடைபெறும் SBSTTA-28 மற்றும் SBI-7 கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்பதுடன் COP17 உலகளாவிய மதிப்பாய்விற்கு இது ஆதரவளிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்