கும்பல் வன்முறை மற்றும் கும்பல் கொலைகள் தடுப்பு மசோதா, 2021
December 25 , 2021 1709 days 1329 0
ஜாக்கண்ட் மாநில சட்டசபையானது இந்த மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
அரசியலமைப்பு உரிமைகளை சிறந்த முறையில் பாதுகாப்பதையும் இந்த மாநிலத்தில் கும்பல் வன்முறைகளைத் தடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இதில் ஒரு திருத்தம் இணைக்கப்பட்ட பிறகு அம்மசோதா நிறைவேற்றப்பட்டு அதன் பின் ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அது அனுப்பப்பட்டது.
இது அறிவிக்கப்பட்டால் இது போன்ற சட்டத்தைக் கொண்டு வந்த மேற்கு வங்காளம், இராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் பட்டியலில் ஜார்க்கண்ட் 4வது மாநிலமாக இடம் பெறும்.