குறைந்தபட்ச ஆதரவு விலையால் தமிழ்நாடு பருத்தி விவசாயிகளுக்கு ஆதாயம்
September 4 , 2025 2 days 56 0
இந்தியப் பருத்திக் கழகத்தின் (CCI) குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) சார்ந்த நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகள் பயனடைவதில்லை.
2021 ஆம் ஆண்டு முதல், விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறையும் போது CCI தமிழக விவசாயிகளிடமிருந்து பருத்தியையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு இருந்த போதிலும் CCI அவ்வாறு செய்யவில்லை.
தமிழ்நாட்டில் பருத்திச் சாகுபடியானது 19 மாவட்டங்களில் சுமார் 70,000 ஹெக்டேர் பரப்பளவில் பரவியிருந்தாலும், பருத்தி விதை நீக்கும் தொழிற்சாலைகள் 100 முதல் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.
கொள்முதல் மையத்தை அமைப்பதற்கு, ஒரு தாலுக்காவில் குறைந்தபட்சம் 3,000 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடியும் 20 கிலோ மீட்டருக்குள் ஒரு விதை நீக்கும் தொழிற்சாலை இருக்க வேண்டும் என்று CCI கொள்முதல் விதிகள் கூறுகின்றது.
தமிழ்நாட்டில் விதை நீக்கும் தொழிற்சாலைகளுக்கான போக்குவரத்துச் செலவுகள் குவிண்டாலுக்கு சுமார் 500 ரூபாய் ஆகும், ஆனால் விதை நீக்கும் செயல்பாடுகள் போக்குவரத்துச் செலவினங்களை ஈடு கட்டுவதில்லை.
ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, விவசாயிகளுக்கானப் போக்குவரத்துச் செலவினங்களை ஈடுகட்ட உதவுகிறது என்பதோடு, மேலும் பருத்தி விவசாயிகளுக்கு உதவுவதற்காக தமிழ்நாட்டிற்கும் இதே போன்ற ஆதரவு பரிந்துரைக்கப்படுகிறது.