பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது நிர்பய் எனப்படும் நடுத்தர வரம்புடைய குறையொலி சீர்வேக ஏவுகணையினை (medium-range subsonic cruise missile) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இது ஒடிசாவின் கடற்கரையருகே அமைந்துள்ள சந்திப்பூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் சோதிக்கப்பட்டது.
நிர்பய் என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது தொழில் நுட்ப சீர்வேக ஏவுகணை ஆகும்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப சீர்வேக ஏவுகணையான நிர்பய் என்ற ஏவகணையானது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மானிக் எனும் சுழல்விசை எந்திரத்தைக் கொண்டு வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உந்துதிறன் எந்திரம் மூலம் ஓர் ஏவுகணையினை வெற்றிகரமாக சோதித்துப் பார்ப்பது இதுவே முதல்முறையாகும்.