TNPSC Thervupettagam

குறைவாக அறியப் படுகின்ற அருகி வரும் உயிரினங்களின் பாதுகாப்பு

October 6 , 2025 5 days 76 0
  • சிங்க வால் குரங்கு, மதராஸ் முள்ளம்பன்றி, வரிகள் கொண்ட கழுதைப் புலி மற்றும் கூம்புத் தலை பெளி மீன் ஆகிய நான்கு குறைவாக அறியப்படுகின்ற அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக தமிழக அரசானது 1 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அருகி வரும் விலங்கினமான சிங்க வால் குரங்கினை பாதுகாப்பதற்கு 48.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவின் பகுதியளவு வறண்ட பகுதிகளில் காணப்படும் மதராஸ் முள்ளம்பன்றியின் பாதுகாப்பிற்காக 20.5 இலட்சம் ரூபாய் வழங்கப் படும்.
  • முதுமலை புலிகள் சரணாலயம் போன்ற பகுதிகளில் எண்ணிக்கைக் குறைவை எதிர் கொள்ளும் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த வரிகள் கொண்ட கழுதைப் புலியின் பாதுகாப்பிற்காக 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மோயாறு ஆற்றில் மிகவும் அருகி வரும் கூம்புத் தலை பெளி மீன்களின் மீட்சிக்காக 17 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
  • சிங்க வால் குரங்கு இனத்தின் இயக்கத்திற்கான வன இணைப்பினை மேம்படுத்துவதற்காக மரங்களின் விதானப் பாலங்கள் அமைக்கப்படும்.
  • உள்ளக வளர்ப்பு மற்றும் மறு மேம்பாட்டுத் திட்டங்கள் ஆனது, பெளி மீன் இனத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்