சட்ட அமலாக்க முகமைகளால் குற்றங்கள் தொடர்பான தரவுகளைப் பயன்படுத்துவதை வலுப்படுத்துவதற்காக, புது தில்லியில் அபிக்யான் செயலியை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அபிக்யான் செயலி என்பது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் இயங்கும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் (NCRB) உருவாக்கப்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளமாகும்.
இது காவல்துறையினர் விரைவான விசாரணை மற்றும் சரிபார்ப்பிற்காக, திறன்பேசிகள் மூலம் குற்றப் பதிவுகளின் பெரிய தரவுத்தளத்தை அணுக உதவுகிறது.
இந்தச் செயலி தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்புடன் (NAFIS) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதோடு இது குற்றவாளிகள், தண்டனை பெற்றவர்கள் மற்றும் கைதிகளின் பதிவுகளுடன் கைரேகைகளை நிகழ்நேரத்தில் ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கிறது.
தனிநபர்களை விரைவாக அடையாளம் காண உதவுவதன் மூலமும், குற்றவியல் விசாரணைகளில் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலமும், சான்றுகள் அடிப்படையிலான சட்ட அமலாக்கத்தை ஆதரிப்பதன் மூலமும் இந்த அமைப்பு டிஜிட்டல் காவல்துறை பணிகளை வலுப்படுத்துகிறது.