TNPSC Thervupettagam

நடைபாதைகளில் நடக்கும் உரிமை குறித்து உச்ச நீதிமன்றம்

June 25 , 2026 5 days 86 0
  • பாதுகாப்பான மற்றும் பிரிக்கப்பட்ட நடைபாதைகளில் நடக்கும் உரிமை என்பது அரசியலமைப்பின் 21-வது சரத்தின் கீழ் ஒரு அடிப்படை உரிமை என்று இந்திய உச்ச நீதிமன்றம் "மணியார் இலியாஸ் @ ஷேக் ரியாஸ் எதிர் பி. ஐயப்பன் மற்றும் பலர்" வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
  • தந்தையுடன் சாலையில் நடந்து சென்ற 5 வயது குழந்தை தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • சாலைகளில் மோட்டார் வாகனங்களின் நடமாட்டத்தை விட பாதசாரிகளின் பாதுகாப்புக்கும் தடையற்ற நடைபாதைகளை அணுகுவதற்கும் முன்னுரிமை அளிக்கப் பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • நடக்கும் உரிமை என்பது கண்ணியமான வாழ்வின் இன்றியமையாத பகுதி என்றும், இது சரத்து 21-இன் கீழான வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்துடன் தொடர்புடையது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • நடைபாதைகளைப் பாதுகாப்பதை ஒரு அரசியலமைப்பு கடமையாகக் கருதி செயல்படுமாறு நகராட்சிகள் மற்றும் மேம்பாட்டு ஆணையங்கள் போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • பாதசாரிகளின் உரிமைகளை உறுதி செய்யவும், நகர்ப்புற சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் பிரத்யேக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்