விலை ஆதரவுத் திட்டம் 2026 - பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல்
June 25 , 2026 4 days 89 0
தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) விலை ஆதரவுத் திட்டத்தின் (PSS) கீழ் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை பெரிய அளவில் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் கோடைக்காலம் மற்றும் ராபி விற்பனைப் பருவம் (RMS) 2025–26 ஆம் ஆண்டு ஆகியவற்றிற்கான பாசிப்பயறு, உளுந்து மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை இந்தக் கொள்முதல் உள்ளடக்கியது.
PSS திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாக்கவும், விலை நிலைத்தன்மையை உறுதி செய்யவும், விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) விடக் குறையும் போது இந்திய அரசு சந்தையில் தலையிடுகிறது.
உத்தரப் பிரதேசம் அதிகபட்ச ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது, அங்கு ₹1,490 கோடி மதிப்பிலான பாசிப்பயறு, உளுந்து மற்றும் நிலக்கடலை கொள்முதல் செய்யப் படவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து குஜராத், ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு மாநில அளவிலான கொள்முதல் வரம்புகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் பிற அங்கீகரிக்கப் பட்ட கொள்முதல் அமைப்புகளின் மூலம் இந்திய அரசால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.