TNPSC Thervupettagam

குற்றவிலக்கு மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

February 25 , 2020 1900 days 551 0
  • அரசியல் கட்சிகள் தங்களது வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் ஆகியவற்றில் தங்களது வேட்பாளர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களைப் பதிவேற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • மிக முக்கியமாக, அவர்கள் (குற்ற வழக்கு உள்ள வேட்பாளர்கள்) ஏன் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பதற்கான காரணங்களை வெளியிடும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல் குற்ற வழக்குப் பதியப்படாதவர்களுக்கு ஏன் வாய்ப்பு (டிக்கெட்) கொடுக்கவில்லை என்பதையும் தெரிவிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
  • இந்த விவரங்களை வேட்பாளரைத் தேர்ந்தெடுத்த 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல் தேதிக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதாவது இதில் எது முதலில் வருகிறதோ அப்பொழுது வெளியிட வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • முகநூல் மற்றும் சுட்டுரை உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்களிலும் ஒரு உள்ளூர் பத்திரிக்கை மற்றும் ஒரு தேசிய செய்தித்தாள் ஆகியவற்றிலும் இந்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
  • 2004 ஆம் ஆண்டில் 24 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் அதுவே 2009 ஆம் ஆண்டில் 30 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் இந்திய உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
  • மேலும், 2014 ஆம் ஆண்டில் 34 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இது 2019 ஆம் ஆண்டில் 43 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • நாட்டின் நலனுக்காக அரசியலில் குற்றத் தன்மையைத் தடுப்பதற்காக ஒரு நெறிமுறையை உருவாக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டது. அந்தப் பிரச்சினைகளைத் தடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் 2018 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட “குற்றவியல் வழக்கு உள்ளவர்களை அறிவிக்க வேண்டும்” என்ற உத்தரவு உதவாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • தேர்தல் ஆணையமானது 1968 ஆம் ஆண்டின் தேர்தல் சின்னம் தொடர்பான ஆணை அல்லது தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் (model code of conduct - MCC) திருத்த வில்லை. எனவே அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு சட்டப்பூர்வ அனுமதியைப்  பெறாது.
  • 2018 ஆம் ஆண்டில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வானது அனைத்து வேட்பாளர்களும் தங்களது குற்றப் பின்னணியை வாக்கெடுப்பிற்கு முன் தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்ததோடு, வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலமாகப் பரவலாக விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
  • இந்த நோக்கத்திற்காக முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் செய்தி அலைவரிசை ஆகியவற்றின் பட்டியலைத்  தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை அல்லது வேட்பாளர்களால் குற்றவியல் பின்னணியை அறிவிப்பதற்கான நேரத்தை தெளிவு படுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
  • இது மக்கள் அதிக அளவில் பயன்படுத்தாத செய்தித்தாள்கள் & செய்தி அலைவரிசை ஆகியவற்றில் தேவையற்ற நேரத்தில் முக்கியமான தகவல்களை வேட்பாளர்கள் வெளியிட வழிவகுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்