இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திற்குள் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority - CCPA) அமைக்கப்படும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
CCPA ஆனது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019ன் கீழ் அமைக்கப் படவுள்ளது.
இது நுகர்வோர் உரிமைகள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், தவறான விளம்பரங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் களைய இருக்கின்றது. இது மோசமான மற்றும் கலப்படம் செய்யப்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்தால் அதற்கேற்றவாறு அபராதம் விதிக்க இருக்கின்றது.
தற்போது மின்னணு வணிகம் மற்றும் நேரடி விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கான ஒழுங்குமுறை அமைப்பு எதுவும் நடைமுறையில் இல்லை.