வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளைச் சரிசெய்யும் நோக்கில் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனாவில் (Pradhan Mantri Fasal Bima Yojana - PMFBY) பெரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது விவசாயிகளுக்கு விருப்பமான தேர்வாக மாற்றப் பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட PMFBYன் கீழ், கடன் பெறும் விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் திட்டத்தை எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
தற்போது, மொத்த விவசாயிகளில் 58 சதவீதம் பேர் கடன் பெற்றவர்களாக உள்ளனர்.