தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் உள்ள புதிய ஏவு வாகன ஏவுதளம் ஆனது, ஒவ்வோர் ஆண்டும் 20 முதல் 25 செயற்கைக்கோள் ஏவுதலைக் கையாளும்.
தற்போது, இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தை (SDSC) இயக்குகிறது.
துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் (PSLV) மற்றும் புவி ஒத்திசைவு செயற்கைக் கோள் ஏவு வாகன (GSLV) செயற்கைக் கோள்கள் SDSC தளத்திலிருந்து ஏவப்படுகின்றன.
ஏவு திறனை அதிகரிப்பதற்காக இந்தியாவின் இரண்டாவது ஏவு வளாகம் ஆனது குலசேகரப்பட்டினத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டமானது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஏவு வாகன ஏவுதளத்தின் கட்டுமானம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டது.
சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத்தினைப் (SSLV) பயன்படுத்தி ஏவு வாகனங்கள் விண்ணில் ஏவப்படும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள இரண்டு ஏவுதளங்கள் உள்ளன என்ற நிலையில் மூன்றாவது ஏவு தளம் SDSC தளத்தில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் கட்டுமானத்தில் உள்ளது.
500 கிலோகிராம் வரை எடையுள்ள ஏவு வாகனங்கள் குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவப்படும்.
இஸ்ரோ மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகிய இரண்டும் புதிய தளத்திலிருந்து ஏவு வாகனங்களை ஏவும்.
2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவு வாகனங்களின் ஏவுதல்களைத் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.