உலகளாவியப் பருவநிலை மற்றும் எரிசக்தி அமைப்புகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் (UNEP) குளிர்வித்தல் நுட்பம் சார் கூட்டணியின் NDC பணிக்குழுவால் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன.
இது உலக நாடுகளின் செயல்பாடுகள் ஆய்வறிக்கையினால் ஆதரிக்கப்படும் ஆறு-நிலையிலான படிப்படியான கட்டமைப்பை வழங்குகிறது.
அவை உமிழ்வை மதிப்பிடுவதற்கும், துறை சார்ந்த இலக்குகளை நிர்ணயிப்பதற்கும், தேசியக் குளிரூட்டல் செயல் திட்டங்களை (NCAPs) உருவாக்குவதற்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வழி காட்டுகின்றன.
இது ஆற்றல் திறன் தரநிலைகள் கிகாலி உடன்படிக்கைக்கு இணக்கமான குளிர் பதனப் பொருள் பயன்பாட்டுக் குறைப்பு, மிகவும் அதிகத் தாக்கமற்ற குளிர்விப்பு நடைமுறைகள் மற்றும் பருவநிலைக்கு ஏற்ற நகர்ப்புறத் திட்டமிடல் ஆகியவற்றினை வலியுறுத்துகிறது.
இக்குளிரூட்டல் தொழில் துறையானது, தற்போது உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வில் 7% பங்களிக்கிறது என்பதோடு மேலும் அது 2050 ஆம் ஆண்டிற்குள் அதன் பங்கை இரட்டிப்பாக்கக் கூடும்.
இந்த நடவடிக்கைகள் பருவநிலைக்கு ஏற்ற நுட்ப ஏற்பு மற்றும் தணிப்பு இலக்குகள் ஆகிய இரண்டையும் ஆதரிக்கின்றன.