TNPSC Thervupettagam

குளிர்காலக் கூட்டத் தொடரிலிருந்து 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம்

December 2 , 2021 1732 days 685 0
  • பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  12 மாநிலங்களவை உறுப்பனர்கள் குளிர்காலக் கூட்டத் தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
  • ஆகஸ்டு மாதத்தில் பாராளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத்தொடரின் போது அவர்கள் மேற்கொண்ட கட்டுப்பாடற்ற மற்றும் வன்முறை நடத்தைகளுக்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
  • இளமாறம் கரீம் (CPM), புலோ தேவி நேதம், சாயா வர்மா, R.போரா, சையது நசீர் ஹூசைன் மற்றும் அகிலேஷ் பிரசாத் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஷ்வம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டோலா சென் மற்றும் சாந்தா சேத்ரி, சிவசேனைக் கட்சியின் பிரியங்கா சதுர்வேதி மற்றும் அனில் தேசாய் ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்