குளிர்கால மூடுபனி பரிசோதனை (WiFEX) 2015 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) தொடங்கப் பட்டது.
WiFEX என்பது மூடுபனியை மட்டுமே மையமாகக் கொண்ட உலகின் சில நீண்டகால திறந்தவெளி சோதனைகளில் ஒன்றாகும்.
இது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (IITM) தலைமையில் நடைபெற்றது.
தற்போது WiFEX ஆனது வட இந்தியாவில் உள்ள பல விமான நிலையங்களுக்கு உள்ளூர் மயமாக்கப்பட்ட, ஓடுபாதை சார்ந்த மூடுபனி கணிப்புகளை விரிவுபடுத்துகின்ற WiFEX -II எனும் அதன் அடுத்தக் கட்டத்தில் உள்ளது.