TNPSC Thervupettagam

கம்சட்கா தீபகற்ப நிலநடுக்கம் 2025

July 26 , 2025 12 hrs 0 min 36 0
  • ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்குக் கடற்கரையில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இது மேற்கில் ஓகோட்ஸ்க் கடலாலும், கிழக்கில் பசிபிக் பெருங்கடல் மற்றும் பேரிங் கடல் ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளது.
  • கம்சட்காவானது பசிபிக் மற்றும் வட அமெரிக்க கண்டத் தட்டுகளின் பேரியக்கவியல் (Tectonic - டெக்டோனிக்) தகடுகளின் சந்திப்பில் அமைந்து உள்ளது.
  • இது பூகம்பங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகளுக்கு ஒரு மையமாக அமைகிறது.
  • இந்தப் பகுதி பசிபிக் எரிமலை வளையத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
  • இது அதன் புவியியல் உறுதியற்றத் தன்மைக்குப் பெயர் பெற்றது.
  • யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாக நியமிக்கப்பட்ட கம்சட்காவின் எரிமலைகளும் கம்சட்காவில் அமைந்துள்ளன.
  • இந்தப் பகுதியில் ஸ்ரெடின்னி (மத்திய) மலைத்தொடர் மற்றும் வோஸ்டோக்னி (கிழக்கு) மலைத்தொடர் என்ற இரண்டு முக்கிய மலைத்தொடர்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்