குளோபல் அவுட்லுக் அறிக்கை 2021: காலநிலை லட்சியத்தின் நிலை
November 24 , 2021 1350 days 635 0
இது உலக வானிலை அமைப்பு அறிக்கையின் ஒரு தற்காலிகத் தரவாகும்.
இது COP26 என்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தை மாநாட்டின் தொடக்க நாளன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
2021 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான தரவுகளின் அடிப்படையில், கடந்த ஏழு வருடங்களும் ஏழு வெப்பமான வருடங்களாக பதிவாகி உள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு தற்காலிக குளிர்ச்சியான "லா நினா" என்ற நிகழ்வு ஏற்படுகிறது என்றால், 2021 ஆம் ஆண்டானது ஐந்தாவது முதல் ஏழாவது வெப்பமான ஆண்டாக "மட்டும்" இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான கடல் வெப்பமயமாதல் மற்றும் கடல் அமிலமயமாக்கல் போன்ற நிகழ்வுகளுடன் உலகளாவிய கடல் மட்ட உயர்வு 2013 ஆம் ஆண்டு முதல் உயர்ந்து 2021 ஆம் ஆண்டில் ஒரு புதிய உச்சத்திற்குத் துரிதமாக உயர்ந்துள்ளது.