TNPSC Thervupettagam

கேரளா பெயர் மாற்ற மசோதா, 2026

February 27 , 2026 19 days 133 0
  • கேரளாவின் பெயரை "கேரளம்" என்று மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கேரள மாநிலச் சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு உருவாக்கப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் சரத்து 3 இன் கீழ், கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2026 ஐ குடியரசுத் தலைவர் மாநிலச் சட்டமன்றத்திற்குப் பரிந்துரைப்பார்.
  • அதன் கருத்துகளைப் பெற்ற பிறகு, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்துவதற்கு குடியரசுத் தலைவரின் பரிந்துரையை மத்திய அரசு கோரும்.
  • அரசியலமைப்பின் சரத்து 3, தற்போதுள்ள எந்தவொரு மாநிலத்தின் பெயரையும் சட்டப் படி மாற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்