கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி
July 20 , 2023
667 days
395
- கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்.
- இவர் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலும், 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும் கேரள மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
- 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.
- கேரளச் சட்டமன்றத்தில் நீண்ட காலம் பதவி வகித்தச் சட்டமன்ற உறுப்பினர் இவர் ஆவார்.
- 1970 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை தொடர்ச்சியாக புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றினார்.
- 2021 ஆம் ஆண்டில் தேர்தல் வெற்றி பெற்றதன் மூலம், ஒரே தொகுதியில் தொடர்ந்து 12வது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சேவைக்கான விருதைப் பெற்ற ஒரே இந்திய முதல்வர் இவரே ஆவார்.
- 2018 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அகில இந்தியக் காங்கிரஸ் குழுவின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.

Post Views:
395