TNPSC Thervupettagam

கோப்பர்நிக்கஸ் சென்டினல்-2 திட்டம்

February 14 , 2026 18 hrs 0 min 11 0
  • சமீபத்தில், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA), கோப்பர்நிக்கஸ் சென்டினல்-2 திட்டத்தினைப் பயன்படுத்தி வடக்கு இத்தாலியில் 2026 குளிர்கால ஒலிம்பிக் அரங்குகளின் உயர் தெளிவுத் திறன் கொண்ட படத்தை வெளியிட்டது.
  • கோப்பர்நிக்கஸ் சென்டினல்-2 என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) கோப்பர்நிக்கஸ் திட்டத்தின் கீழ் ESA ஆல் உருவாக்கப்பட்ட ஒரு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டமாகும்.
  • பூமியில் நில-மேற்பரப்பு நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • இது சூரிய-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இரண்டு துருவ-சுற்றுப்பாதை செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது என்பதோடு இது உயர் தெளிவுத்திறன் கொண்ட பல்-நிறமாலை படங்களை வழங்குகிறது.
  • இந்தத் தரவு விவசாயம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, நீர் தர மதிப்பீடு மற்றும் காலநிலை தொடர்பான ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்