TNPSC Thervupettagam

கோல்டன் டோம் எறிகணை பாதுகாப்புக் கவசம்

August 19 , 2025 2 days 48 0
  • கோல்டன் டோம் (GD) என்பது எதிரி நாட்டின் கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணைகளுக்கு (ICBMs) எதிராக நாட்டினைப் பாதுகாக்க வடிவமைக்கப்படும் ஒரு அமெரிக்க எறிகணை பாதுகாப்பு அமைப்பாகும்.
  • விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள்கள், இடைமறிப்புக் கணைகள் மற்றும் லேசர்கள் ஆகியவற்றின் வலையமைப்பைப் பயன்படுத்தி எறிகணைகளை ஏவப்பட்ட உடனேயே அதன் "உந்துதல் கட்டத்திலேயே" இடைமறிப்பதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கோல்டன் டோம் நான்கு பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டிருக்கும்:
    • செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி விண்வெளி அடிப்படையிலான இடைமறிக்கும் அடுக்கு.
    • கலிபோர்னியா மற்றும் அலாஸ்காவில் உள்ள மேம்படுத்தப்பட்ட தரைக் கட்டுப்பாடு அடிப்படையிலான நடுவழி பாதுகாப்பு (GMD) அமைப்பு.
    • ஐந்து புதிய நிலம் சார் ஏவுதளங்கள் (அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் மூன்றும், அலாஸ்காவில் ஒன்று, ஹவாயில் ஒன்று).
    • நகரங்களுக்கான வரையறுக்கப்பட்ட பகுதி பாதுகாப்பு, புதிய ரேடார்கள், ஒரு பொதுவான ஏவு அமைப்பு மற்றும் பேட்ரியாட் எறிகணைப் பாதுகாப்பு போன்ற அமைப்புகளை இணைத்தல்.
  • இரும்புக் கவசம் ஆனது சிறிய பகுதிகளையே எறிகணைகளிலிருந்து பாதுகாக்கிறது, ஆனால் GD நாடு தழுவிய, பல அடுக்கு எறிகணை இடைமறிப்புத் திறனைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்