TNPSC Thervupettagam

கோவளம் கடற்கரை நீலக் கொடி சான்றிதழ்

November 15 , 2025 20 days 95 0
  • தமிழ்நாட்டில் உள்ள கோவளம் கடற்கரை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக சர்வதேச நீலக் கொடி சான்றிதழைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • நிலையான சுற்றுலா மற்றும் பொறுப்பான கடலோர மேலாண்மையை மேம்படுத்துவதே இந்தச் சான்றிதழின் நோக்கமாகும்.
  • இது முதன்முதலில் கோவளம் கடற்கரைக்கு 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று வழங்கப்பட்டது என்ற நிலையில் இது தமிழ்நாட்டின் முதல் நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரையாக மாறியது.
  • டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE) ஆனது 33 அளவுருக்களை மதிப்பிட்ட பிறகு சான்றிதழை வழங்குகிறது.
  • அளவுருக்களில் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, தூய்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்