கோவிட்-19 தடுப்பூசி குறித்து பிரதமர் மோடியின் 3 பெரிய அறிவிப்புகள்
December 28 , 2021 1310 days 528 0
ஓமிக்ரான் பரவல் மீதான அச்சுறுத்தலின் மத்தியில், குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியையும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பூஸ்டர் தவணைகளைச் செலுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும்.
இணை நோய்ப் பாதிப்புகள் உள்ள மூத்தக் குடிமக்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தவணைகள் செலுத்தப்படும்.
60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய்ப் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, அவர்களுடைய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஒரு முன்கூட்டிய தடுப்பூசி தவணையைச் செலுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பும் வழங்கப்படும்.
சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் மற்றொரு 'முன் கூட்டிய தடுப்பூசி தவணையானது' செலுத்தப்படும்.