1911 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியத் தேசியக் காங்கிரஸின் கல்கத்தா அமர்வில், இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன எனும் கீதம் முதல் முறையாக பகிரங்கமாகப் பாடப்பட்டதன் 110வது ஆண்டு நிறைவை டிசம்பர் 27 ஆம் தேதியானது குறிக்கிறது.
1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஜன கண மன கீதமானது, இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபையினால் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் பாரத பாக்யோ பிதாதா என்ற பாடலை (Bharata Bhagyo Bidhata) இயற்றினார்.
இதன் முதல் சரணமான ஜன கண மன தற்போது நமது தேசிய கீதம் ஆக உள்ளது.