கோஹார்ட் கனெக்ட் 2025 எனப்படும் நீளமான கோஹார்ட் ஆய்வுகள் குறித்த பினோம் தேசிய மாநாட்டை இந்தியா தொடங்கியது.
இது புவனேஸ்வரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (CSIR–IMMT) தொடங்கப் பட்டது.
இந்த முன்னெடுப்பானது முக்கிய நோய்களின் மரபணு, இயக்க முறை மற்றும் சுற்றுச்சூழல் இயக்கிகளை ஆராயும் இந்தியாவின் மிகப்பெரியச் சான்றுகள் சார்ந்த ஆய்வாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீரிழிவு நோய் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் அவற்றின் தொடர்பு உடைய சிக்கல்களின் அதிகரித்து வரும் ஒரு தேசிய நெருக்கடியை இந்த வெளியீடு எடுத்துக் காட்டுகிறது.
இந்தியா ஏற்கனவே CSIR மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறை மூலம் கிட்டத்தட்ட 10,000 மனித மரபணுக்களை வரிசைப்படுத்தியுள்ளது என்பதோடுஒரு மில்லியன் மரபணு வரிசைகளை நோக்கிப் பணிகள் முன்னேறி வருகின்றன.
தடுப்பு மற்றும் துல்லிய-மருத்துவ அணுகுமுறைகளுக்கான இந்தியா சார்ந்தத் தரவுகளை உருவாக்குவதற்கான ஒரு நீண்ட காலக் கூட்டு ஆய்வுகளை இந்தத் திட்டம் ஆதரிக்கும்.