சட்டப்பூர்வ அளவீடுகள் (சரக்குப் பொதிகள்) விதிகள், 2011 திருத்தம்
November 11 , 2021 1408 days 538 0
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகமானது 2011 ஆம் ஆண்டிற்கான சட்டப் பூர்வ அளவீடுகள் (சரக்குப் பொதிகள்) விதிகளைத் திருத்தி அமைத்துள்ளது.
இதனால் அனைத்து நிறுவனங்களும் தற்போது சரக்குப் பொதிகளில் ஒரு அலகின் விற்பனை விலையை அச்சிட வேண்டும்.
இந்தப் புதியத் திருத்தமானது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்.
இந்த நடவடிக்கை மூலம், நுகர்வோர்கள் அலகின் அடிப்படையில் விலையைக் கண்டறிவது எளிதாக இருக்கும்.
இந்தத் திருத்தத்தின் கீழ், ஒரு கிலோகிராமிற்கும் அதிகமாக சரக்குப் பொதிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அவற்றின் அதிகபட்ச சில்லறை விலையுடன் ஒரு கிலோகிராமிற்கான ஒரு அலகின் விலையையும் அச்சிட வேண்டும்.