TNPSC Thervupettagam

சத்தீஸ்கர் துணை ஆயுதப்படை சட்டம்

July 13 , 2025 14 days 62 0
  • 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், மாவோயிஸ்ட் கிளர்ச்சியை எதிர்கொள்வது தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் சிறப்புக் காவல் அதிகாரிகளை (SPO) பயன்படுத்துவதை நிறுத்துமாறு சத்தீஸ்கர் மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டது.
  • பின்னர் மாநில அரசானது துணை ஆயுதக் காவல் படைச் சட்டத்தை நிறைவேற்றி, பொது ஒழுங்கைப் பேணுவதிலும் மாவோயிஸ்ட் வன்முறையை நன்கு எதிர்ப்பதிலும் பாதுகாப்புப் படைகளுக்கு உதவ ஒரு துணைப் படையை உருவாக்க என அங்கீகாரம் அளித்தது.
  • அங்கு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் சிறப்புக் காவல் அதிகாரிகளை (SPO) பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் முந்தைய உத்தரவிற்குப் பிறகு, மாநில அரசு சட்டம் இயற்றியதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்த வழக்கு ஆனது நந்தினி சுந்தர் & பிறர் Vs சத்தீஸ்கர் மாநில அரசு இடையிலான வழக்கு என அழைக்கப்படுகிறது.
  • தற்போது, ​​உச்ச நீதிமன்றமானது 2011 ஆம் ஆண்டு துணை ஆயுதக் காவல் படைச் சட்டத்தின் செல்லுபடித் தன்மையினை உறுதி செய்துள்ளது.
  • அத்தகையச் சட்டங்கள் நீதித்துறை முடிவுகளை மாற்றினாலும் அல்லது மீறினாலும், அரசியலமைப்பு வரம்புகளுக்குள் சட்டங்களை இயற்றுவதற்கான சட்டமன்றத்தின் முழு அதிகாரத்தையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்