TNPSC Thervupettagam

சமூகப் பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கை 2025

May 1 , 2025 65 days 122 0
  • உலக வங்கியானது, சமூகப் பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கை 2025: The 2-Billion-Person Challenge என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளில், குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள 4.7 பில்லியன் மக்கள் சமூகப் பாதுகாப்பிற்கான அணுகலைப் பெற்றுள்ளனர்.
  • இருப்பினும், அந்த நாடுகளில் உள்ள இரண்டு பில்லியன் மக்கள், சமூகப் பாதுகாப்பின் பலன்களைப் பெறாமல் அல்லது போதிய அளவில் பெறாமல் உள்ளனர்.
  • குறைவான வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள நான்கு பேரில் மூன்று பேர் எந்த விதமான சமூகப் பாதுகாப்புப் பலனையும் பெறவில்லை.
  • மிகவும் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கூட, மக்கள் தொகையில் பெரும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சமூகப் பாதுகாப்பின் பலன்களைப் பெறாமல் உள்ளனர்.
  • தற்போதைய வளர்ச்சி விகிதங்களின்படி, மிகவும் கடுமையான வறுமை நிலையில் வாழ்பவர்கள் முழுமையான சமூகப் பாதுகாப்பு பலன்களை பெறுவதற்கு இன்னும் 18 ஆண்டுகளும், குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள 20% ஏழைக் குடும்பங்கள் சமூகப் பாதுகாப்புப் பலன்களை பெற இன்னும் 20 ஆண்டுகளும் ஆகும்.
  • குறைவான வருமானம் உள்ள நாடுகளில், சமூக உதவி சார் நிதிப் பரிமாற்றங்கள் ஆனது ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் வருமானத்தில் வெறும் 11% மட்டுமே.
  • இந்த அறிக்கைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 27 நாடுகளின் மாதிரியில் சமூகப் பாதுகாப்புப் பலன்களில் மிகவும் சராசரியாக ஆண்களால் பெறப்பட்ட ஒவ்வொரு 1 டாலருக்கும் பெண்கள் 81 சென்ட்கள் மட்டுமே பெறுவதால் பாலினப் பாகுபாடுகள் பெருமளவில் தொடர்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்