TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சமூகநிலை அறிக்கை 2025

May 3 , 2025 63 days 120 0
  • இந்த அறிக்கையானது, ‘உலக சமூக அறிக்கை 2025: சமூக முன்னேற்றத்தை விரைவுப் படுத்துவதற்கான ஒருமித்த கருத்து கொண்ட ஒரு புதிய கொள்கை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இது ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் - உலக மேம்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்துடன் (UNU-WIDER) இணைந்து ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையால் (UN DESA) வெளியிடப்பட்டது.
  • வாழ்க்கைத் திருப்தி குறித்த சமீபத்திய மதிப்பீட்டின்படி, உலகளவில் 60 சதவீத மக்கள் போராடி வருகின்றனர் என்பதோடு மேலும் 12 சதவீதம் பேர் துயருற்று வருகின்றனர்.
  • 690 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு 2.15 அமெரிக்க டாலர்களுக்குக் குறைவான வருமானம் கொண்டவர்களாக தீவிர வறுமை நிலையில் வாழ்கின்றனர்.
  • உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் அதாவது ஒரு நாளைக்கு 2.8 பில்லியனுக்கும் அதிகமானோர், 2.15 முதல் 6.85 அமெரிக்க டாலர்கள் வரையிலான வருமானத்தில் வாழ்கின்றனர்.
  • இரண்டாவது உலக சமூக மேம்பாட்டு உச்சி மாநாடு ஆனது, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்