TNPSC Thervupettagam

உலகளாவியக் காற்றாற்றல் உற்பத்தி அறிக்கை 2024

May 4 , 2025 62 days 97 0
  • உலகளாவியக் காற்றாற்றல் சபை (GWEC) ஆனது இந்தப் புதியதொரு மதிப்பீட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • தற்போதைய வளர்ச்சிக் கணிப்புகள், 2030 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய அளவிலான உமிழ்விற்கான சாத்தியமான வழியைப் பேணுவதற்காக தேவைப்படும் நிறுவப்பட்ட திறனில் சுமார் 77 சதவீதத்தை மட்டுமே இந்தத் துறையானது வழங்கும் என்பதைக் குறிப்பிடுகின்றன.
  • 2024 ஆம் ஆண்டில், உலகளவில் 117 ஜிகாவாட் புதிய காற்றாற்றல் உற்பத்தி திறன் அலகுகள் நிறுவப் பட்டது என்ற நிலையில் இது 2023 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 116.6 ஜிகாவாட்டிலிருந்து ஒரு சிறிய அதிகரிப்பு ஆகும்.
  • மொத்த உலகளாவியக் காற்றாற்றல் மின் உற்பத்தித் திறன் ஆனது தற்போது 1,136 ஜிகாவாட்டாக உள்ளது.
  • அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகியவை ஐந்து முன்னணிக் காற்றாற்றல் சந்தைகளில் இடம் பெற்றுள்ளன.
  • 2024 ஆம் ஆண்டில், சுமார் 79,824 மெகாவாட் (MW) திறன் கொண்ட புதிய காற்றாற்றல் நிறுவல்களுடன் சீனா உலகளவில் முன்னிலை வகித்தது.
  • உஸ்பெகிஸ்தான், எகிப்து மற்றும் சவுதி அரேபியா ஆகியவை காற்றாற்றலை ஏற்றுக் கொண்ட புதிய நாடுகளாக உருவெடுத்தன.
  • உலகளவில் காற்றாற்றல் மூலம் 56.3 GW ஆற்றல் உற்பத்தி செய்யப்பட்டதுடன் 2024 ஆம் ஆண்டானது, கடல் சார் காற்றாற்றல் உற்பத்தியில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்