இது உத்தரகாண்டின் ரிஷிகேஷ்-தாராசு ரோடு தேசிய நெடுஞ்சாலையில் மிக அதிக மக்கள் தொகை பரவல் கொண்ட சம்பா நகரத்தின் கீழ், எல்லைச் சாலைகள் அமைப்பினால் (BRO - the Border Roads Organisation) அமைக்கப்பட்ட 440 மீட்டர் நீளம் கொண்ட ஒரு சுரங்கப் பாதையாகும்.
இந்த சுரங்கப் பாதையானது மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள BROவினால் அமைக்கப் பட்டுள்ளது.
இது சார்தாம் பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி ஆகிய இந்து சமய புனிதத் தளங்களை இணைக்கும் வகையில் 900 கிலோ மீட்டர் தொலைவுள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் மற்றும் அகலப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
இந்தத் திட்டமானது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தினால் மேற்கொள்ளப் படுகின்றது.