ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்படியான வாழ்வகம் குறித்த விதிகள்
May 29 , 2020 1803 days 685 0
மத்திய உள்துறை அமைச்சகமானது 2010 ஆம் ஆண்டின் சட்டமான “ஜம்மு காஷ்மீர் குடிமைப் பணிகள்” (அதிகாரப் பரவலாக்கம் மற்றும் ஆள்சேர்ப்புச் சட்டம்) என்ற ஒரு சட்டத்தைத் திருத்தியுள்ளது.
இது “நிரந்தக் குடியிருப்பாளர்கள்” என்ற கூற்றுக்கு மாற்றாக அதனை “ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தின் சட்டப்படியான வாழ்வகம்” என்பதைக் கொண்டு மாற்றியுள்ளது.
இது ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (மாநில சட்டங்களை ஏற்றுக் கொள்ளுதல்) ஆணை, 2020-ன் மூலமாக சட்டப்படியான வாழ்வகத்தை மறுவரையறை செய்கின்றது.
2010 ஆம் ஆண்டின் சட்டமானது “மாவட்ட, கோட்ட மற்றும் மாநில” அளவிலான பதவிகளைக் கொண்டுள்ள குடிமைப் பணிகளை அவர்களுக்கு உரித்தாக அறிவித்தது.
இதற்கு முன்பு, ஜம்மு காஷ்மீரின் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மட்டுமே அரசிதழ் பதிவு பெற்ற மற்றும் அரசிதழ் பதிவு பெறாத பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.
“சட்டப்படியான வாழ்வகம்” என்ற சான்றிதழை வழங்குவதற்கான அதிகாரமானது தாசில்தாரிடம் (வருவாய் அதிகாரி) உள்ளது.
சட்டப்படியான வாழ்வகம் பற்றி
சட்டப்படியான வாழ்வகம் – ஒரு நபர் தனது நிரந்தர வாழ்விடமாக ஒரு நாட்டை குறிப்பதைக் குறிக்கின்றது.
இது ஒருவர் தனது நிரந்தர இல்லத்தை ஒரு இடத்தில் ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது. அங்கு அவர் நிரந்தரக் குடியிருப்பாளராகக் கருதப்படுகின்றார்.
ஒருவரின் சட்டப்படியான வாழ்வகத்திற்கு ஒரு உதாரணம் ஒருவர் வசிக்கும் சொந்த மாநிலமாகும்.