சம்ரித் கிராம் ஒருங்கிணைந்த நேரடி மற்றும் டிஜிட்டல் சேவைகள்
November 7 , 2025 5 days 49 0
தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆனது கிராமப்புற இந்தியாவில் நிலவும் டிஜிட்டல் இடைவெளியை/பிளவைக் குறைப்பதற்காக சம்ரித் கிராம் ஒருங்கிணைந்த நேரடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் (பைஜிடல்) என்ற சோதனைத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அரி & உம்ரி, உத்தரப் பிரதேசத்தில் சௌரவாலா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நரகோடுரு ஆகிய மூன்று கிராமங்களில் இந்த சோதனைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, இந்தியாவின் சிறப்பு தொலைத்தொடர்பு மையங்கள் (TCoE) அமலாக்கப் பங்குதார அமைப்புகளுடன் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
ஒவ்வொரு கிராமத்திலும் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, இணைய ஆளுகை, இணைய வணிகம் மற்றும் நிதி உள்ளடக்கத்திற்கான ஒருங்கிணைந்த மையமாகச் செயல்படும் சம்ரிதி கேந்திரா அமைந்திருக்கும்.
இந்தத் திட்டமானது, வீடுகளில் ஒளியிழை இணைப்பு (FTTH), கிராமப் பகுதி வலையமைப்புகள் மற்றும் பொது பயன்பாட்டு அருகலை ஹாட்ஸ்பாட்கள் ஆகியவற்றினை உள்ளடக்கிய பாரத்நெட் இணைப்பைப் பயன்படுத்துகிறது.
கல்வி சார் சேவைகளில் திறன் மிகு வகுப்பறைகள், மிகை மெய் தோற்றம் (AR) மற்றும் மெய்நிகர் தோற்றம் (VR) அடிப்படையிலான கற்றல் மற்றும் அரசாங்க முன்னெடுப்புகளுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் திறன் வழங்கீடு ஆகியவை அடங்கும்.
வேளாண் துறைக்கான ஆதரவில் இணைய இணைப்புப் பொருட்கள் (இணைய உலகம்) சார்ந்த மண் பரிசோதனை (IoT), ஆளில்லா விமானத்தின் உதவி மற்றும் திறன் மிகு பாசன அமைப்புகள் ஆகியவை அடங்கும் என்கின்ற அதே நேரத்தில் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தொலைத்தொடர்பு வழி ஆலோசனை வழங்கல் மற்றும் சுகாதார சேவை ஏடிஎம்கள் ஆகியவை அடங்கும்.
இந்த முன்னெடுப்பானது, நாடு தழுவிய அமலாக்கத்திற்கான விரிவுப்படுத்தக் கூடிய மற்றும் பிரதிபலிக்கக் கூடிய மாதிரியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது என்பதோடு மேலும் தடையற்ற நேரடி மற்றும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மூலம் கிராமப்புறக் குடிமக்களுக்கு அதிகாரமளிக்கிறது.