TNPSC Thervupettagam

இந்தியாவின் மேம்பட்ட உற்பத்தி செயல் திட்டம்

November 7 , 2025 5 days 32 0
  • நிதி ஆயோக் அமைப்பின் வளர்ந்து வரும் புதியத் தொழில்நுட்பங்களின் மையம் ஆனது "Reimagining Manufacturing: India’s Roadmap to Global Leadership in Advanced Manufacturing" என்ற செயல் திட்டத்தினை வெளியிட்டது.
  • இந்தச் செயல் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML), மேம்பட்ட பொருட்கள், டிஜிட்டல் இரட்டை மாதிரி மற்றும் எந்திரவியல்/ரோபாட்டிக்ஸ் ஆகியவை முக்கியத் தொழில்நுட்பங்களாக அடையாளம் காணப்படுகின்றன.
  • 2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் உற்பத்தித் துறையின் பங்களிப்பை மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க என்று 13 முன்னுரிமை உற்பத்தித் துறைகளில் இது கவனம் செலுத்துகிறது.
  • 2035 ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும், மேம்பட்ட உற்பத்திக்கான முதல் மூன்று உலகளாவிய மையங்களுள் இந்தியாவும் ஒன்றானதாக நிலை நிறுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த வளர்ந்து வரும் புதியத் தொழில்நுட்பங்களை ஏற்கத் தவறினால், 2035 ஆம் ஆண்டிற்குள் 270 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இழப்பும், 2047 ஆம் ஆண்டிற்குள் உற்பத்தியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பும் ஏற்படும்.
  • இந்தச் செயல் திட்டமானது, இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் டெலாய்ட் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்