TNPSC Thervupettagam

இராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் 2025

November 7 , 2025 5 days 38 0
  • இராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) ஆனது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
  • இது இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினக் கொண்டாட்டம் அவரது 150வது பிறந்தநாளைக் குறிக்கிறது.
  • குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் முக்கிய தேசிய அளவிலான நிகழ்வு நடைபெற்றது.
  • டெல்லியில் ஒரு மாபெரும்/முக்கிய நிகழ்ச்சி உட்பட நாடு தழுவிய அளவில் "Run for Unity" மாரத்தான் நடைபெற்றது.
  • My Bharat/எனது பாரத் தளத்தில் இளையோர் விவகார அமைச்சகத்தினால் தொடங்கப் பட்ட "சர்தார்@150 ஒற்றுமை மார்ச் (யாத்ரா)", இளைஞர்களிடையே தேசபக்தி மற்றும் குடிமைப் பொறுப்பை ஊக்குவித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்