FASTag சரிபார்ப்பை எளிதாக்குவதற்காக என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது (NHAI) Know Your Vehicle என்ற உங்கள் வாகனம் குறித்து அறிந்து கொள்ளுங்கள் (KYV) என்ற செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
பயனர்கள் தற்போது வாகனப் பதிவு எண் தகடு மற்றும் FASTag குறியீட்டினைக் காட்டும் வகையில் வாகனத்தின் முன் பக்கப் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்ற வேண்டும்.
பதிவுச் சான்றிதழ் (RC) விவரங்கள் ஆனது வாகனம் அல்லது கைபேசி எண்ணைப் பயன்படுத்தி VAHAN தரவுத் தளத்திலிருந்து தானாகவே பெறப்படும்.
KYV கொள்கைக்கு முன் வழங்கப்பட்ட FASTags தவறாகப் பயன்படுத்தப்படுவதாக புகாரளிக்கப் படாதவரை செயலில் இருக்கும்.
பல வழிப் பாதைக் கொண்ட தடுப்பிலா போக்குவரத்து சுங்கக் கட்டண முறை (MLFF) அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக FASTag அமைப்பை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.