TNPSC Thervupettagam

சரண்டா வனம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவு

May 21 , 2026 12 days 99 0
  • 31,468.25 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சரண்டா வனத்தை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்குமாறு ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • ஆசியாவின் மிகப்பெரிய சால் மரக் காடான சரண்டா வனம் ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் அருகே அமைந்துள்ளது.
  • "சரண்டா" என்றால் "எழுநூறு மலைகளின் நிலம்" என்று பொருளாகும் மற்றும் இந்தக் காடு சுமார் 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.
  • இதனை "சரண்டா வனவிலங்கு சரணாலயம்" என அறிவித்த முன்னாள் பீகார் அரசின் 1968 ஆம் ஆண்டு அறிவிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
  • தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் ஒரு கிலோமீட்டர் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்குள் (ESZ) சுரங்கம் அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது என்று நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்