இரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதுதில்லி – லூதியானா நகரிடை விரைவு வண்டியின் வரம்பிலிருந்து பஞ்சாப்பின் லோகியன் காஸ் வரையிலான விரிவாக்கத்தைத் துவக்கி வைத்துள்ளார்.
அந்த அமைச்சகம் அந்த இரயில் வண்டிக்கு சர்பத்-தா-பாலா எக்ஸ்பிரஸ் என மறுபெயரிட்டு இருக்கின்றது.
இந்தப் புதிய இரயில்வண்டி குருநானக் ஜியின் 550வது பிறந்த தினத்தை முன்னிட்டு சுல்தான்பூருக்குச் செல்லும் சீக்கிய யாத்திரீகர்களுக்குச் சேவையை வழங்கும்.
தற்போது பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாகிப் என்ற இடத்தை அடுத்து முதல் சீக்கிய குருவின் வாழ்க்கையோடு முக்கிய தொடர்புடைய இடம் சுல்தான்பூர் லோதி இடமாகும்.
இரயில் வண்டியின் பெயர் மனிதாபிமானத்தின் நன்மையை எடுத்துக் காட்டும் வகையில் குருநானக்கின் போதனைகளைப் பிரதிபலிக்கின்றது.