TNPSC Thervupettagam

சர்வதேசப் பயணிகளுக்கு உதவும் புதிய செயலி

November 8 , 2019 2100 days 701 0
  • இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் சுங்கத் துறை அனுமதியளிப்பை மேம்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் ICEDASH மற்றும் ATITHI ஆகிய இரண்டு புதிய தகவல் தொழில்நுட்ப முன்னெடுப்புகளை இந்திய அரசு  வெளியிட்டுள்ளது.
  • மேலும் இந்த முன்னெடுப்புகளானது இந்தியாவிற்கு வரும் சர்வதேசப் பயணிகளின் பயண உடைமைகள் மற்றும் நாணய அறிக்கைகளை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கும் உதவ இருக்கின்றது.
  • மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் மூலம் ICEDASH  வலைதளத்தை அணுக முடியும்.
  • ATITHI என்பது சர்வதேசப் பயணிகளின் சுங்க அறிவிப்பை முன்கூட்டியே தாக்கல் செய்வதற்கான ஒரு கைப்பேசிச் செயலியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்