TNPSC Thervupettagam

சர்வதேச கைபேசி சாதன அடையாளக் குறியீட்டு எண்ணின் பதிவு

October 6 , 2022 1035 days 513 0
  • கைபேசி உற்பத்தி நிறுவனங்களினால், இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து கை பேசிகளின் சர்வதேச கைபேசி சாதன அடையாளக் குறியீட்டு எண்ணை இந்திய அரசாங்கத்திடம் பதிவு செய்வதை தொலைத் தொடர்புத் துறை (DoT) கட்டாயம் ஆக்கி உள்ளது.
  • சர்வதேச கைபேசி சாதன அடையாளக் குறியீடு (IMEI) என்பது ஒவ்வொரு கைபேசி சாதனத்தையும் தனித்துவமாக அடையாளம் காணும் 15 இலக்க எண்கள் ஆகும்.
  • இறக்குமதியாளர்களும், ஒவ்வொரு கைபேசியினையும் இறக்குமதி செய்வதற்கு முன் அதன் சர்வதேச கைபேசி சாதன அடையாளக் குறியீட்டு எண்ணை அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
  • தகவல் தொடர்புத் துறை அமைச்சகமானது முன்னதாக ஒரு மத்திய சாதன அடையாளப் பதிவேட்டினை வெளியிட்டது.
  • இந்த அடையாளப் பதிவேடானது கைபேசிகளை அவற்றின் சர்வதேச கைபேசி சாதன அடையாளக் குறியீட்டு எண்ணின் அடிப்படையில் வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு என மூன்று வகைகளாக வகைப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்