TNPSC Thervupettagam

சர்வதேச திமிங்கல ஆணையக் கூட்டம் 2026

October 3 , 2026 3 days 55 0
  • ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட்டில் நடைபெற்ற சர்வதேச திமிங்கல ஆணையத்தின் 70வது கூட்டத்தில் (IWC-70), அறிவியல் அடிப்படையிலான செட்டேசியன் (கடல் பாலூட்டிகள்) பாதுகாப்பிற்கான தனது அர்ப்பணிப்பை இந்தியா மீண்டும் உறுதிப் படுத்தியது.
  • சர்வதேச திமிங்கல ஆணையம் (IWC) 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று வாஷிங்டன், டி.சி.யில் கையெழுத்தான திமிங்கல வேட்டையை ஒழுங்குபடுத்துவதற்கான சர்வதேச மாநாட்டின் கீழ் நிறுவப்பட்டது.
  • திமிங்கல வேட்டை மேலாண்மை மற்றும் திமிங்கலப் பாதுகாப்பிற்கான உலகளாவிய அமைப்பான IWC தற்போது 89 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
  • இந்தியா 1981 ஆம் ஆண்டு முதல் IWC அமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறது, மேலும் அறிவியல் ஆராய்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நடைமுறைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இது வலியுறுத்தியுள்ளது.
  • இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள கடல் பாலூட்டிகள் (திமிங்கில இனங்கள்) 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் மிக உயர்ந்த சட்டப் பாதுகாப்பைப் பெறுகின்றன; மேலும், இந்தியா டால்பின் திட்டம் மற்றும் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டுள்ளது.
  • பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அடையாளம் காணப்பட்ட 25 உயிரினங்களில் அரபிக்கடல் ஹம்பேக் திமிங்கலத்திற்கு இந்தியா சிறப்புப் பாதுகாப்புக் கவனத்தை அளித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்