சர்வதேச படைச் சிறுத்தை பாதுகாப்பு தினம் 2026 - ஆகஸ்ட் 04
August 6 , 2026 48 days 162 0
இந்த தினமானது படைச் சிறுத்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
பெரிய பூனை இனங்களில் மிகச்சிறியதான படைச் சிறுத்தையானது நிலப்பரப்பு படைச் சிறுத்தை (நியோஃபெலிஸ் நெபுலோசா) மற்றும் சுண்டா படைச் சிறுத்தை (நியோபெலிஸ் டியார்டி) என இரண்டு வகைகளை உள்ளடக்கியது.
வாழ்விட இழப்பு, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மற்றும் மனித-வனவிலங்கு மோதல் ஆகியவற்றின் காரணமாக இவ்விரண்டு இனங்களும் இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவின் பாதுகாப்புச் செயல் திட்டம் (CAP) 14 முன்னுரிமை நிலப்பரப்புகள், வாழ்விடப் பாதுகாப்பு, அறிவியல் கண்காணிப்பு, வேட்டையாடுதல் தடுப்பு நடவடிக்கைகள், சமூகப் பங்கேற்பு மற்றும் பருவநிலை தாங்கும் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.