மூன்றாவது சர்வதேச பாரத் 6G கருத்தரங்கம் 2026 ஆனது புது தில்லியின் துவாரகாவில் முடிவடைந்தது.
இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026 உடன் இணைந்து பாரத் 6G கூட்டணியால் (B6GA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கம், சர்வதேச அலைபேசி தொலைத்தொடர்பு (IMT)-2030 மற்றும் அதற்கு அப்பாலான திட்டங்கள் குறித்து விவாதித்தது.
சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த GSMA, one6G, GTI Alliance, 6G Innovation Forum (Taiwan) மற்றும் VOICE ஆகியவற்றுடன் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) பரிமாறிக் கொள்ளப் பட்டன.
6G ஆராய்ச்சி, தரநிலைகள், பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய இணைப்பு குறித்த 10 வெள்ளை அறிக்கைகள் மற்றும் அறிக்கைகளை B6GA வெளியிட்டது.
2026 ஆம் ஆண்டு அக்டோபர் 27 முதல் 29 ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ESTIC (வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கருத்தரங்கு) 2026-ஐ தொலைத்தொடர்புத் துறை (DoT) முன்னிலைப் படுத்தியது, இதன் கருத்துரு “Creative Minds, Catalysing Science, Empowering Technologies” என்பதாகும்.