புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது (MoSPI) இந்தியாவில் சுற்றுச்சூழல்-பொருளாதார கணக்குகளுக்கான உத்தி 2026-2030-ஐ வெளியிட்டது.
இயற்கை வளக் கணக்கியலை மேம்படுத்துதல், தரவு இடைவெளிகளை நிரப்புதல் மற்றும் பொருளாதார திட்டமிடலில் சுற்றுச்சூழல் தகவல்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை இந்த உத்தி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது காடுகள், தாதுக்கள், மண், நிலம், நீர், கார்பன் இருப்புகள், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளை உள்ளடக்கியது.
இது முந்தைய 2022-2026 உத்தியைப் பின்பற்றுகிறது மற்றும் 2018 ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல்-பொருளாதார கணக்கியல் அமைப்பின் (SEEA) கீழ் இந்தியாவின் சுற்றுச்சூழல் கணக்கியல் பணிகளை உருவாக்குகிறது.
SEEA என்பது பொருளாதார புள்ளிவிவரங்களுடன் சுற்றுச்சூழல் தரவை இணைக்க ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டமைப்பாகும்.
பொருளாதார உற்பத்தியை அளவிடும் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் (GDP) போலல்லாமல், சுற்றுச்சூழல் கணக்குகள் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களையும் கண்காணிக்கின்றன.