TNPSC Thervupettagam

சர்வதேச பாரத் 6G கருத்தரங்கம் 2026

October 13 , 2026 12 days 145 0
  • மூன்றாவது சர்வதேச பாரத் 6G கருத்தரங்கம் 2026 ஆனது புது தில்லியின் துவாரகாவில் முடிவடைந்தது.
  • இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026 உடன் இணைந்து பாரத் 6G கூட்டணியால் (B6GA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கம், சர்வதேச அலைபேசி தொலைத்தொடர்பு (IMT)-2030 மற்றும் அதற்கு அப்பாலான திட்டங்கள் குறித்து விவாதித்தது.
  • சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த GSMA, one6G, GTI Alliance, 6G Innovation Forum (Taiwan) மற்றும் VOICE ஆகியவற்றுடன் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) பரிமாறிக் கொள்ளப் பட்டன.
  • 6G ஆராய்ச்சி, தரநிலைகள், பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய இணைப்பு குறித்த 10 வெள்ளை அறிக்கைகள் மற்றும் அறிக்கைகளை B6GA வெளியிட்டது.
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 27 முதல் 29 ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ESTIC (வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கருத்தரங்கு) 2026-ஐ தொலைத்தொடர்புத் துறை (DoT) முன்னிலைப் படுத்தியது, இதன் கருத்துரு “Creative Minds, Catalysing Science, Empowering Technologies” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்